கள்ளச்சாராய ஒழிப்பு பணி... சிறப்பாக செயல்பட்ட 5 பேருக்கு காந்தியடிகள் காவல் விருது...

தமிழ்நாடு காவல்துறையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட 2 பெண் ஆய்வாளர்கள் உட்பட 5 சீர்மிகு

தமிழ்நாடு காவல்துறையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றி கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட 2 பெண் ஆய்வாளர்கள் உட்பட 5 சீர்மிகு காவலர்களுக்கு காந்தியடிகள் காவல் விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை  ஒழிக்கும் பணியில் நேர்மையுடன் சிறப்பாகச் செயல்படும் காவல்துறை அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் காந்தியடிகள் காவல் விருதுகள்வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில், இந்த விருதுக்கான இந்த ஆண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட தமிழக அரசு, ”கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக 5 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருது வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில்

காவலர்.  மகுடீஸ்வரி, பெண் காவல் ஆய்வாளர் அவர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, புனித தோமையார் மலை, தெற்கு மண்டலம். சென்னை பெருநகர காவல் ஆய்வாளர்.

காவலர்.  லதா, பெண் காவல் ஆய்வாளர் அவர்கள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, முசிறி-துறையூர், திருச்சி மாவட்டம்.

காவலர். செல்வராஜூ, காவல் உதவி ஆய்வாளர் அவர்கள், மத்திய புலனாய்வுப் பிரிவு, சேலம் மண்டலம்.

காவலர். சண்முகநாதன், தலைமைக் காவலர் அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலூகா காவல் நிலையம், அயல்பணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம்.

காவலர். ராஜசேகரன், தலைமைக் காவலர் அவர்கள் , கீழ்கொடுங்காலூர் காவல் நிலையம், அயல்பணி மத்திய புலனாய்வுப் பிரிவு, திருவண்ணாமலை மாவட்டம்.

இந்த விருதுகள் தமிழக  முதல்வரால் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் நாள் நடைபெறும்,  குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என்றும், இவ்விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000/- ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்”. என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.