முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு முழு உருவ சிலை அமைக்கப்படும் என முதல்வரின் அறிவிப்பிற்கு ஓபிஎஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவை விதி எண் 110-ன் கீழ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்-கிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.முதல்வரின் அறிவிப்பிற்கு ஓபிஎஸ் மற்றும் பாஜக எம்.எல்.ஏ வானதி வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஓபிஎஸ் வரவேற்பு
unknown nodeவரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார்; சமூகநீதிக்காக யார் போராடினாலும், அவர்கள் பக்கம் நிற்போம் என்று சொல்லி தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வரவேற்பு
unknown nodeவி.பி.சிங் எந்த சமூகநீதியை இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என முடிவு செய்து ஆக்கபூர்வமான விஷயங்களைக் கொண்டு வந்தாரோ அதை மத்திய அரசு வழி நடத்துகிறது. முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறேன் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.