பட்டாசு கடை விபத்து – உரிமையாளர் மீது வழக்கு பதிவு!

A case has been registered against the shop owner in connection with the firecracker shop fire accident.

கள்ளக்குறிச்சி பட்டாசு கடை தீ விபத்து தொடர்பாக கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளகுறிச்சியில் உள்ள சங்கராபுரம் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய செல்வகணபதி என்பவரது பட்டாசு கடையின் மாடியில் தீபாவளி விற்பனைக்காக சேகரித்து வைக்கப்பட்டுள்ள பட்டாசுகள் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில் 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தீ விபத்து தொடர்பாக தற்பொழுது கடை உரிமையாளர் செல்வகணபதி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் அரசு அனுமதியை மீறி அதிக அளவில் பட்டாசு வைத்திருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.