இபிஎஸ் முதலமைச்சர் ஆவதற்கு தீச்சட்டி எடுக்கும் பிரபல நடிகர் கஞ்சா கருப்பு.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவதற்கு, பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு தீச்சட்டி எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள மூங்கில்ஊரணி அருகே முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த திருவிழாவின் போது பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அளித்த பேட்டியில் “எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் ஆனதற்கும், அவர்விரைவில் முதலமைச்சராக வேண்டுமென்று சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று தீச்சட்டி எடுக்க உள்ளதாக கூறினார்.
மேலும், தற்போது மின்சார கட்டணம், வீட்டு வரி ஆகியவை உயர்த்தப்பட்டிருக்கிறது, பழனிச்சாமி ஆட்சிக்கு வந்திருந்தால் இந்த கட்டண உயர்வுகள் இருந்திருக்காது என்றும் அதிமுகவில் தற்போது நடப்பது அங்காளி பங்காளி சண்டை. இது விரைவில் முடிவுக்கு வரும், வெகு விரைவில் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்றும் நடிகர் கஞ்சா கருப்பு கூறினார்.