வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை பெயரளவிற்கு மட்டுமில்லாமல், செயல்படக்கூடியதாகவும் இருப்பது அவசியமாகும் என டிடிவி தினகரன் ட்வீட்.
வெளிநாட்டு வேலைக்குச் சென்று மியன்மார் மற்றும் தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வெளிநாட்டு வேலைக்குச் சென்று மியன்மார் மற்றும் தாய்லாந்தில் சட்ட விரோத கும்பலிடம் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
சித்ரவதைக்கு ஆளான தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பேசும் காணொளியைப் பார்க்கும்போது மிகுந்த வேதனை ஏற்படுகிறது. அதனால்தான், வெளிநாட்டு வேலைகளில் தமிழர்கள் யாரும் ஏமாற்றப்படாமல் இருப்பதற்கு சரியான வழிமுறைகளை வகுத்திட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை பெயரளவிற்கு மட்டுமில்லாமல், செயல்படக்கூடியதாகவும் இருப்பது அவசியமாகும்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node