ரூ.404 கோடி மதிப்பில் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – தமிழ்நாடு அரசு உத்தரவு

Tamil Nadu government order to expand Chief Minister's breakfast scheme by Rs.404 crore

tamilnadu govt

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ரூ.404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழக அரசு அரசாணை

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த வருடம் மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தற்போது முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ரூ.404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,900 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.404 கோடி மதிப்பில் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் – தமிழ்நாடு அரசு உத்தரவு