இன்று அதிகாலை பிரதமர் மோடியின் வீட்டின் மேல் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு.
டெல்லியில் உள்ள பிரதமரின் வீடு மற்றும் அலுவலகத்தில் ட்ரோன்கள் மற்றும் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை பிரதமர் மோடியின் வீட்டின் மேல் சந்தேகத்திற்குரிய வகையில் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியில் அதிகாலை ட்ரோன் பறந்ததையடுத்து, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் டெல்லி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் டெல்லி காவல்துறை பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் பறந்தது தொடர்பாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
