நாட்டு மக்களுக்கு தீபாவளியின் இந்த பரிசு சாமானியனுக்கு நிம்மதியை அளிப்பதோடு மட்டுமல்லாமல் பணவீக்கத்தையும் குறைக்கும்.
நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இந்த விலை குறைப்பு வாகனஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு தீபாவளியின் இந்த பரிசு சாமானியனுக்கு நிம்மதியை அளிப்பதோடு மட்டுமல்லாமல் பணவீக்கத்தையும் குறைக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown node