தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூனில் தேர்வு நடைபெறும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 51 ஆயிரம் பேரில் முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வில் 50,674 மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.

பொதுத்தேர்வை தமிழகத்தில் 8.36 லட்சம் மாணவர்களும், புதுச்சேரியில் 14,710 மாணவர்கள் எழுத உள்ளதாக கூறப்பட்டது. இதில், பள்ளி தேர்வர்கள் 49,559 பேரும், தனி தேர்வர்கள் 1,115 பேரும் தேர்வு எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேர்வு

இந்த நிலையில், தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்படும். தேர்வு எழுதாதவர்களின் விகிதத்தை குறைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.