அனைவரும் அரசியல் பழக வேண்டும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கல்வி தனியாருக்கு கொடுத்துவிட்டு மதுவை அரசு எடுத்து நடத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,அரசியல்வாதிகள் கூறும் குட்டிக்கதைகளை கேட்டு எதிர்த்துக் கேள்வி கேட்கமறந்துவிடுகிறோம். தங்க பிஸ்கட்டுக்கும் , நாம் சாப்பிடும் பிஸ்கட்டுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வரி உள்ளது.
நான் அரசியல்வாதி, இனிவரும் அரசியல்வாதிகள் என்னை போல் இருக்க வேண்டும். கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு மதுவை அரசு எடுத்து நடத்துகிறது.அனைவரும் அரசியலும் பழக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.