ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக அதிமுக இடையே வாக்குவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரியார் நகர் வாக்குச்சாவடியில் அதிமுக மற்றும் திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரியார் நகர் வாக்குச்சாவடியில் அதிமுக மற்றும் திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று காலை விறுவிறுப்பாக தொடங்கியது. 738 வாக்குச்சாவடிகளில் தற்போது தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில், வாக்காளர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து  வருகின்றனர்.

10.10% வாக்குகள் பதிவு

unknown node

காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உட்பட மொத்தமாக 77 வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம் காணுகின்றனர். தற்போது 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதிமுக – திமுக வாக்குவாதம்

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரியார் நகர் வாக்குச்சாவடியில் அதிமுக மற்றும் திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  வாக்குச்சாவடி அருகே நின்று வாக்கு சேகரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.