2-வது சுற்றில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 19,223 வாக்குகளை பெற்று முன்னிலையில் உளளார்
கடந்த மாதம் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், 15 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.
இதில் முதல் சுற்று முடிவில், காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
2-வது சுற்றில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை
இந்த 2-வது சுற்றில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 19,223 வாக்குகளை பெற்று முன்னிலையில் உளளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 6,497 வாக்குகளை பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.