சமூக நீதிக்கு எதிரியான பாஜக-வை அ.தி.மு.க தூக்கி சுமப்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கு கருத்தியல் அடிப்படையில் செய்கிற மிகப்பெரும் துரோகம் என திருமாவளவன் பேட்டி.
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திய பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள், அதிமுக தலைமை அலுவலகத்தில், மூத்த நிர்வாகிகள் முன்னிலையில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.
இது மிகப்பெரும் துரோகம்
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், ‘சமூக நீதிக்கு எதிரியான பாஜக-வை அ.தி.மு.க தூக்கி சுமப்பது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கு கருத்தியல் அடிப்படையில் செய்கிற மிகப்பெரும் துரோகம்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை நெஞ்சில் நிறுத்தி அதிமுகவை சமூக நீதிக்கான ஒரு இயக்கமாக இபிஎஸ் நடத்த வேண்டும்; தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இபிஎஸ் தனது அரசியல் காய்களை நகர்த்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.