பிரதமர் மோடியை வரவேற்கும் ஈபிஎஸ் – ஓபிஎஸ்..!

இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கின்றனர்.

இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வருகிறார். அதன் பின், சென்னை விமான நிலைய புதிய முனையக் கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ளார்.

இதற்காக சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடி வருகை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை வரவேற்கும் ஈபிஎஸ் – ஓபிஎஸ்

இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கின்றனர். பிரதமர் மோடியை சந்திக்க இரு தரப்பிலும் தனித்தனியாக நேரம் கேட்கப்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்,  நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இரு தரப்பும் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.