உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரிய உத்தரவு...!

Power Board directs power engineers to provide uninterrupted power to events attended by Home Minister Amit Shah

TANGEDCO

உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தமிழக முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள துவங்குகிறார். என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த பிரச்சார பாதயாத்திரையாக இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தனது பாதயாத்திரையை அண்ணாமலை துவங்குகிறார்.

இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைக்க உள்ளார். இதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து இன்று மதியம் 1 மணி அளவில் மதுரை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து ராமேஸ்வரம் செல்கிறார். மாலை 5 மணி அளவில் ராமேஸ்வரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதயாத்திரை துவக்க விழாவுக்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

இந்த நிலையில்,  உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரிய பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த முறை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் வேலூர் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகை புரிந்த போது மின்தடை ஏற்பட்ட நிலையில், இதற்கு பாஜக தரப்பில்  தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.