#ElectionBreaking : ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதியானது..!

எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட அதிக வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளதால் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதியானது.

எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட அதிக வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளதால் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதியானது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் முடிவுகள் ஒவ்வொரு சுற்றாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 11 சுற்றுகள் முடிந்துள்ளது. இதில்,  காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ். இளங்கோவன் 82,995 வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறார். அவருக்கு அடுத்த படியாக அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 31,962 வாக்குகளை பெற்று 2-வது இடத்தில் இருக்கிறார்.

அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை விட 51 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருக்கிறார். எனவே, இன்னும் 42,971 வாக்குகளே எண்ணப்பட வேண்டிய நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 82,995 வாக்குகளை பெறுள்ளார்.

இவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதியானது

இந்த நிலையில், எண்ணப்பட வேண்டிய வாக்குகளை விட அதிக வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளதால் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதியானது. சுமார் 45000 வாக்குகள் மட்டுமே எண்ணப்படவேண்டி உள்ளதால், ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.