தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் -எப்போது..!

Election for members of 3 state councils in Tamil Nadu - when

தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு,எப்போது வெளியாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 23 ஆம் தேதியன்று மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் காலமானார்.அதன் பின்னர்,மே 10, 2021 அன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி  பதவியை ராஜினமா செய்தனர்.

மேலும்,அவர்கள் மூன்று பேருடைய பதவிக்காலம் முறையே 24.7.2025, 29.06.2022 மற்றும் 02.04.2026 ஆகிய தேதிகளில் முடிவடையவுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தலை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் படி உடனடியாகத் தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும் என்றும்,அதற்கான தேர்தல் அறிவிப்பை தனித்தனியாக வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையர்களிடம் டி.ஆர்.பாலு, வில்சன் ஆகியோர் கடந்த மாதம் நேரில் வலியுறுத்தினர்.

இந்நிலையில்,தமிழகத்தில் காலியாகவுள்ள 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஓரிரு நாட்களில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.