ஈரோடு தனியார் விடுதிக்கு எடப்பாடி பழனிசாமி வருகை..! அதிமுக நிர்வாகிகள் அமோக வரவேற்பு..!

ஈரோட்டில் உள்ள தனியார் விடுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை.

ஈரோட்டில் உள்ள தனியார் விடுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை.

இபிஎஸ் வெற்றி :

பொதுக்குழு வழக்கிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2022, ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர்.

unknown node

தொண்டர்கள் கொண்டாட்டம் :

இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இபிஎஸ் புகைப்படத்திற்கு பாலபிஷேகம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல மற்ற மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

unknown node

எடப்பாடி பழனிச்சாமி வருகை :

இதையடுத்து ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதிக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிபுரிந்தார். அவரது வருகையை முன்னிட்டு தனியார் விடுதியில் அதிமுக கட்சியினர் வான வேடிக்கை மற்றும் மேலதாளத்துடன் அமோக வரவேற்பு  அளிக்கப்பட்டது.

unknown node