சென்னையில் அண்ணாசாலை அருகே நிலஅதிர்வு உணரப்பட்டதால் கட்டடங்களில் இருந்து வெளியேறிய மக்கள்.
நில அதிர்வு
unknown nodeசென்னையில் அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் யூனியன் வங்கி மற்றும் 2 கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர்.
அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர். மெட்ரோ பணிகளால் நில அதிர்வு உணரப்பட்டிருக்க கூடும் என தகவல்கள் வெளியானது.
மெட்ரோ நிர்வாகம் மறுப்பு
இதற்கு மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், சென்னை மெட்ரோ பணிகளால் நில அதிர்வு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. மாதவரம் பகுதியில் மட்டுமே சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது என மெட்ரோ முதன்மை பொது மேலாளர் லிவிங்ஸ்டன் விளக்கம் அளித்துள்ளார்.