அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு காலமானார்.அமைச்சரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்தனர்.மேலும் நேரிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதன் பின்பு அமைச்சர் துரைக்கண்ணு உடல் சென்னையில் இருந்து சொந்த ஊரான தஞ்சை ராஜகிரிக்கு வந்தடைந்தது. வன்னியடி கிராமத்தில் உள்ள துரைக்கண்ணுவின் உடல் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அமைச்சர் துரைக்கண்ணுவின் உடலுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.பின்பு அமைச்சருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. இறுதியாகஅமைச்சர்துரைக்கண்ணுவின்உடல் 63 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.