திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துகளை பேசாதீர்கள்! – பிரதமர் மோடி

திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களை பேசாதீர்கள் என பிரதமர் மோடி கட்சியினருக்கு அறிவுரை

திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களை பேசாதீர்கள் என பிரதமர் மோடி கட்சியினருக்கு அறிவுரை

டெல்லியில் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். 35  அமைச்சர்கள், பாஜக ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்கள், 37 மாநில பாஜக தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியாவின் மிகச் சிறந்த சகாப்தம் இனி தான் வருகிறது. பாஜக வெறும் அரசியல் இயக்கம் உள்ள அது ஒரு சமூக இயக்கம். திரைப்படங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களை பேசாதீர்கள் என கட்சியினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

திரைப்படங்கள் குறித்த தலைவர்களின் கருத்தால், அரசின் திட்டங்கள் செய்திகளில் முக்கியத்துவம் பெறுவதில்லை என பிரதமர் பேசியதாக கூறப்படுகிறது. அண்மையில் ‘பதான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியை நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு அறிவுரை வழங்கியுள்ளார்.