கரூரை கைப்பற்றியது திமுக....! 4 தொகுதிகளிலும் வெற்றி...!

The DMK captured 4 constituencies in Karur district.

கரூர் மாவட்டத்தில் 4 தொகுதியையும் திமுகவினர் கைப்பற்றினர்.

தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைப்பெற்ற நிலையில், தேர்தல் முடிவுகள்  வெளியாகியுள்ளது. அதன்படி திராவிட முன்னேற்ற கழகம் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி கனியை பறித்துள்ளது.

இந்நிலையில், கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி தொகுதியில் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சிவகாமசுந்தரி, குளித்தலை தொகுதியில் மாணிக்கம் ஆகியோர் தி.மு.க சார்பில் போட்டியிட்டனர். இதனையடுத்து, இந்த 4 தொகுதிகளிலும் திமுகவினர் வெற்றி பெற்று கரூர் முழுவதையும் கைப்பற்றி உள்ளனர்.

இதுகுறித்து கரூர் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறுகையில், ‘மக்கள் மகத்தான வெற்றியை திமுகவிற்கு வழங்கியுள்ளனர். கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. மக்கள் அளித்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முத்தமிழறிஞர் கலைஞரின் பொற்கால ஆட்சியை தமிழகத்துக்கு வழங்குவோம்’ என தெரிவித்துள்ளார்.