திமுக கூட்டணி நாளை உண்ணாவிரத போராட்டம் – காவல்துறை அனுமதி மறுப்பு

It has been reported that the police have refused permission on behalf of the DMK alliance parties in Tamil Nadu as a hunger strike

தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற உள்ள நிலையில்  காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்  போராட்டம் நடத்தி வரும் நிலையில் ,கடந்த 14-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விவசாய அமைப்புகள் அறிவித்த நிலையில் உண்ணா விரதம் இருந்தனர்.

இதனிடையே விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால்விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் நாளை  உள்ள உண்ணாநிலைப் போராட்டத்திற்கு காவல்துறைஅனுமதிமறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.