ராகுல் காந்தி தகுதி நீக்கம்..! காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை...!

காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை.

காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை.

டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.