காவிரியின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு அனுமதி தர கூடாது என கோரிக்கை – அமைச்சர் துரைமுருகன்

Minister Duraimurugan said in an interview that the central government should not give permission to build a dam across Cauvery.

Minister Durai murugan

காவிரியின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு அனுமதி தர கூடாது என வலியுறுத்தியதாக அமைச்சர் துரைமுருகன் பேட்டி.

காவேரில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை மதத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் எனவும், கடந்த மாதம் போதிய அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறக்காதது குறித்தும், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிகள் மேற்கொள்வது குறித்தும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் வரிகளுடன் கலந்தாலோசிக்க நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லி புறப்பட்டார்.

இந்த நிலையில், இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் உடன் அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, இந்த சந்திப்பிற்கு பின் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், காவிரியின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசு அனுமதி தர கூடாது. தமிழகத்துக்கு தர வேண்டிய காவிரி நீரை வழங்க உத்தரவிடுமாறு வலியுறுத்தினோம். தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 9 டிஎம்சி தண்ணீரை வழங்கவில்லை; மாத வாரியாக தமிழ்நாட்டிற்கான தண்ணீரை வழங்க, கர்நாடக அரசை அறிவுறுத்த கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.