பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு – ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்..!

பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.

கர்நாடகாவின் கோலாறில் 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள், பிரதமர் மோடி என்ற குடும்பப் பெயரை மையப்படுத்தி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, ராகுலுக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.