சென்னையில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்...! 2,000 பேருக்கு தடுப்பூசி ...!

இன்று சென்னை நேரு உள்விளையாடரங்கில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாநகராட்சி நடத்துகின்றனர்.

இன்று சென்னை நேரு உள்விளையாடரங்கில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாநகராட்சி நடத்துகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து உள்ளது. இதனால், மக்கள் முககவசம் அணிவதை கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்று சென்னை நேரு உள்விளையாடரங்கில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மாநகராட்சி நடத்துகின்றனர். இந்த முகாமில், 2000 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும், 45-59 வயதுக்கு உட்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.