மக்களவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக தலைவர் நட்டா தலைமையில் ஆலோசனை..!

பாஜக, மக்களவை தேர்தல் தொடர்பாக ஜூலை மாதம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது.

JPNadda

பாஜக, மக்களவை தேர்தல் தொடர்பாக ஜூலை மாதம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது.

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், பாரதிய ஜனதா கட்சி மக்களவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 6, 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு பாஜக தலைவர் நட்டா தலைமை தாங்குவார். மூன்று நாட்களாக நடைபெறும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, பரப்புரை, வாக்குறுதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது