விவசாயிகள் 8-ஆம் தேதி நடத்தும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு

The Congress party has expressed support for the 8th protest against the agricultural laws introduced by the central government.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக 8-ஆம் தேதி நடத்தும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 11-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றன. பேச்சுவார்த்தைக்கு 9-ஆம் தேதி அழைப்பு மத்திய அரசு விடுத்த நிலையில் ,வருகின்ற 8 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் டிசம்பர் 8 -ஆம் தேதி பாரத் பந்திற்கு ஆதரவளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.அன்றைய தினம் நாடுமுழுவதும் காங்கிரஸ் கட்சி தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் 8-ஆம் தேதி நடத்தும் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு