கோடநாட்டில் யாருமே சிந்தித்து பார்க்க முடியாத அளவுக்கு கொலையும், கொள்ளையும் நடைபெற்றுள்ளது என ஓபிஎஸ் பேட்டி.
மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவரிடம் பொது சிவில் சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பொது சிவில் சட்டம் நாட்டுக்கு தேவையா, தேவையில்லையா? என்பது சட்ட வழக்கறிஞர்கள் குழுவிடம் அறிக்கை கேட்டுள்ளோம், அறிக்கை வந்த பின் இது குறித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கோடநாடு கொலை கொள்ளை குறித்து பேசிய அவர், 16 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த அம்மா அவர்கள் வாழ்ந்த கோடநாட்டில் யாருமே சிந்தித்து பார்க்க முடியாத அளவுக்கு கொலையும், கொள்ளையும் நடைபெற்றுள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம், தென்காசியில் மறுவாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
