கலைஞர் நூலக வருகை பதிவேட்டில் முதல்வரின் நெகிழ்ச்சி பதிவு..!

In the Madurai artist library visit register, Chief Minister M.K.Stal's enthusiastic record about the library.

MKStalin MeetingSecpolce

மதுரை கலைஞர் நூலக வருகை பதிவேட்டில், நூலகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவு.

மதுரை நத்தம் சாலையில் கடந்தாண்டு துவங்கப்பட்டு சுமார் ரூ.215 கோடி  செலவில் இந்த கலைஞர் நூலகம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது 3.56 ஏக்கர் பரப்பளவில் கீழ்த்தளம், தரைத்தளம் என மொத்தம் ஆறு தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

நூலகத்தின் நுழைவு வாயிலில் உள்ள கலைஞரின் உருவ சிலையை முதல்வர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து, நூலகத்தை சுற்றி  பார்வையிட்டார். அதன்பின் அங்கிருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில், மதுரை கலைஞர் நூலக வருகை பதிவேட்டில், நூலகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சிப் பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நூல் நிலையத்தை மதுரை மாநகரத்தில் திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன். முத்தமிழறிஞர் தலைவன் வழியில் நான்..’ என எழுதியுள்ளார்.