காலை உணவுத் திட்டம் எளியோரின் அடிவயிற்றில் பால்வார்க்கும் திட்டம் என திருமாவளவன் ட்வீட்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று காலை மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காலை உணவுத் திட்டம் எளியோரின் அடிவயிற்றில் பால்வார்க்கும் திட்டம். இந்தியாவுக்கே வழிகாட்டும் முன்மாதிரித் திட்டம். பசியாறினால் பலவும் பயனுளதாய் அமையும். பொறுமையும் மகிழ்வும் பூவிதழ்களாய் மலரும். பசிப்பிணி மருத்துவராய் பரிணாமம் பெற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எமது பாராட்டுக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
unknown node