ஆளுநரை அவையைவிட்டே வெளியேற வைத்த மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து விசிக சார்பில் பாராட்டினோம் என திருமாவளவன் ட்விட்.
நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், ஆளுநர் உரை குறித்தும், ஆளுநரின் செயல்பாடு குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்தார். இதனையடுத்து, முதல்வர் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆளுநரின் அடாவடிப் போக்கிற்கு உடனடி எதிர்வினையாற்றி ஆளுநரை அவையைவிட்டே வெளியேற வைத்த மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின்அவர்களைச் சந்தித்து விசிக சார்பில் பாராட்டினோம். அத்துடன் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.’ என பதிவிட்டுள்ளார்.