#Breaking:குடியரசு தலைவரை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்..!

Chief Minister Stalin is currently in Delhi to meet President Ramnath Kovind.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக,முதல்வர் ஸ்டாலின் தற்போது டெல்லி புறப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்போது சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுள்ளார்.அவருடன் எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் செல்கின்றனர். முதல்வராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக முதல்வர் டெல்லி செல்கிறார்.மேலும்,முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்வர் பேசவுள்ளார்.

அதன்படி,நாளை 12:15 மணிக்கு குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர்  ஸ்டாலின் சந்திக்கிறார்.

மேலும்,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 அன்று சட்டப்பேரவையில் அவரது முழு உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் நேரில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.