#Breaking:வந்துவிட்டது..."வலிமை சிமெண்ட்" – அறிமுகம் செய்த முதல்வர் ஸ்டாலின்!

Chief Minister MK Stalin has introduced the 'Valimai' cement of the state of Tamil Nadu.

சென்னை:தமிழக அரசின் ‘வலிமை சிமெண்டை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

தமிழக அரசு சிமெண்ட் ‘வலிமை’ என்ற புதிய வணிக பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்திருந்தார்

இதனையடுத்து,தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘வலிமை‘சிமெண்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிமுகம் செய்து வைக்கிறார் என்று நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,தமிழக அரசின் டான்செம் நிறுவனம் சார்பில் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘வலிமை‘சிமெண்டைதலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது அறிமுகம் செய்து,வலிமைசிமெண்ட்விற்பனையை தொடங்கி வைத்தார்இதன்மூலம்,வெளிச்சந்தையில் சிமெண்டின் சில்லறை விற்பனை விலை குறையும் என்று கூறப்படுகிறது.

#Breaking:வந்துவிட்டது..."வலிமை சிமெண்ட்" – அறிமுகம் செய்த முதல்வர் ஸ்டாலின்!