முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான் – நடிகர் ரஜினிகாந்த்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான் என ரஜினிகாந்த் பேட்டி.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான் என ரஜினிகாந்த் பேட்டி.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில், சென்னை பாரிஸ் கார்னர் பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டலின் அவர்களின் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் முதல்வர் எங்கள் பெருமை – எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70 ஆண்டுகால பயணம் பற்றிய புகைப்பட தொகுப்பு இந்த கண்காட்சியில் இடம் பெற்று உள்ளது.

புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட ரஜினிகாந்த்

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். அவர்களுடன் அமைச்சர் சேகர் உடனிருந்தார். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ரஜினிகாந்த் பேட்டி

அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் இரண்டும் ஒன்றுதான்; அவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்தான் முதலமைச்சர் பதவி; அவர் நீண்ட ஆரோக்கியத்துடம் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.