முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்...!

The Chief Minister will visit Trichy today to review the dredging work going on in the delta districts.

mkstalin

டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை பாா்வையிடுவதற்காக முதல்வர் இன்று திருச்சி பயணம்.

மேட்டூா் அணை வரும் 12ஆம் தேதி திறக்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நிலையில்,டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை பாா்வையிடுவதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சி பயணம் மேற்கொள்கிறார். டெல்டா பாசனப்பகுதிகளில் நீா் நிலைகளை தூா்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இப்பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் திருச்சி, தஞ்சாவூருக்கு பயணம் மேற்கொள்கிறார். இன்று திருச்சி செல்லும் முதல்வர், நாளை தஞ்சாவூர் செல்ல உள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்...!