இலவச மருத்துவ பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமை செயலக பணியாளர்களுக்கு அப்பல்லோ மருத்துவமனையோடு இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இந்த மருத்துவ முகாம் வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாம், தினமும் 10 மணி முதல் 4 மணி வரை தலைமை செயலக ஊழியர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.

இந்த மருத்துவ முகாமில் இரத்த பரிசோதனை, இசிஜி, ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.