தனதுபிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், மரக்கன்று நட்டி, கேக் வெட்டி கொண்டாடினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மரக்கன்று நட்டி வைத்தார். அதனை தொடர்ந்து, அங்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். அதனை தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் பிறந்தநாள் பரிசுகளை வழங்கினர்.