தமிழக விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டங்களையும் மத்தியஅரசு இனிமேல் அறிவிக்ககூடாது – விஜயகாந்த்

தமிழக விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டங்களையும் மத்தியஅரசு இனிமேல் அறிவிக்ககூடாது என விஜயகாந்த் அறிவுறுத்தல்.

தமிழக விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டங்களையும் மத்தியஅரசு இனிமேல் அறிவிக்ககூடாது என விஜயகாந்த் அறிவுறுத்தல்.

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், தற்போது தமிழகத்தில், டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்க்கதக்கது. தமிழக விவசாயிகளை பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டங்களையும் மத்தியஅரசு இனிமேல் அறிவிக்ககூடாது என தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

unknown node