புதிய நிலக்கரி சுரங்க திட்டம் குறித்து விவசாயிகள் கவலை அடைய வேண்டாம் என தமிழக அரசு தரப்பில் விளக்கம்.
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம், உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி, அண்டமி, நெம்மேரி, கொடியாளம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் நடத்தவும் விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில், இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கவலை அடைய வேண்டாம்
அந்த விளக்கத்தின்படி, இந்த அறிவிப்பு ஆரம்ப கட்ட ஆய்வுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பு. புதிய நிலக்கரி சுரங்க திட்டம் குறித்து விவசாயிகள் கவலை அடைய வேண்டாம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால் அனுமதிதரப்படாது.
unknown node