குட்நியூஸ்...! சிமென்ட் விலை குறைப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு..!

Cement prices have been reduced by Rs 30, Industry Minister Thangam Thennarasu said

சிமென்ட் விலை ரூ.30 குறைக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சிமெண்ட்,ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.

இதனையடுத்து,கட்டுமானப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி,கடந்த சில நாட்களுக்கு முன்பு,கட்டுமானப் பொருட்களின் உற்பத்தியாளர்களுடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்,பேச்சுவாரத்தை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து,விலையேற்றம் குறித்து தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் கூட்டம் கடந்த வாரத்தில் நடைபெற்றது. அப்போது,கொரோனா இரண்டாவது அலையால் சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளன.மேலும்,40 சதவிகித தொழிலாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கி வருவதால் விலை ஏற்றமானது தவிர்க்க முடியாததாக உள்ளது.

எனினும்,ஏழை மக்களுக்கு சலுகை விலையில் சிமெண்ட் வழங்க தமிழக அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.எனவே,தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அரசுடன் சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் இணைந்து செயல்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில்,சிமென்ட் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேலும்,இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கூறியதாவது: “தமிழகத்தில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.490 லிருந்து,ரூ.460 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல்,கட்டுமானப் பொருட்களின் விலையை மேலும் குறைக்க உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.அதற்கான அறிவிப்பு விரைவில் வரும்”,என்று தெரிவித்தார்.

குட்நியூஸ்...! சிமென்ட் விலை குறைப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு..!