வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும் -டாக்.ராமதாஸ்

Dr. Ramadoss' request to stop the speeding Meghadatu project and protect the Cauvery.

ramadoss

வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும் என டாக்.ராமதாஸ் கோரிக்கை.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்டுவது உறுதி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் கணடனம் தெரிவித்து வரும் நிலையில், டாக்.ராமதாஸ் அவர்களும் கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்ட அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும். தேவைப்பட்டால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார்.