இறந்தவர்களின் பெயர்களை நீக்க கோரிய வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு

The High Court has directed the Election Commission to consider and decide on the request to remove the names

வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்க  கோரிக்கையை பரிசீலித்து  முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.எனவே ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனிடையே வாக்காளர் பட்டியலில் உள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. அதாவது குறிப்பிட்ட தொகுதிகளில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்பொழுது   இறந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்க கோரிய திமுக கோரிக்கையை இரண்டு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.