கூட்டணி பற்றி வரும் வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது – தினேஷ் குண்டுராவ்

Can't respond to rumors about alliance Congress chief Dinesh Kundurao

சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள் காண கூட்டம் நடைபெற்றது இதில் தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி ,காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும்  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்,திமுக மற்றும் காங்கிரஸ் உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நாளை அல்லது நாளை மறுநாள் முடிவடையும் என்று தெரிவித்தார்.

செய்தியாளர்கள் மக்கள் நீதிமய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணி பற்றி கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த குண்டுராவ் கூட்டணி பற்றி வரும் தகவல்கள் வதந்திகள்,அதுபற்றி பதிலளிக்க முடியாது என்று கூறினார்.

ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கொடுத்த புகார்குறித்து கேள்வி எழுப்பும்போது.ராகுல் காந்தியை தமிழ்நாட்டில் விரும்புகிறார்கள்.

அவர் தமிழ் மக்களுடன் இணக்கமாக உள்ளார் அவரின் புகழைக் கண்டு பாஜக  பொறாமை கொண்டு தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளது. அந்த புகாரை தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் என்று தெரிவித்தார்.