#BREAKING : அமைச்சர் பொன்முடி வீட்டில் 9 மணி நேரத்திற்கு மேலாக தொடரும் சோதனை..! நகை மதிப்பீட்டாளர்கள் வருகை..!

Indian Bank jewelery appraisers visited Minister Ponmudi's house.

Minister ponmudi

இந்தியன் வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.

சென்னையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகங்கள் , விழுப்புரத்தில் அவருக்கு சம்பந்தமான இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

செம்மண் குவாரி தொடர்பாக 2012ம் ஆண்டில் பதியப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சொதஹனை கடந்த 9 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை சோதனையில் அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டன் நாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில்,  தற்போது நகை மதிப்பீடு செய்யக்கூடிய, இந்தியன் வங்கி நகை மதிப்பீட்டாளர்கள் அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர்.