#BREAKING : இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க பெங்களூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று சந்திராயன் -3  திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை  நேரில் சந்தித்து வாழ்த்து

PM Modi

பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்திற்கு நேரில் சென்று சந்திராயன் -3  திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளை  நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பிரதமர் மோடி பெங்களூர் வந்தடைந்தார். தென்னாப்பிரிக்கா, கிரீஸ் பயணங்களை முடித்து இந்தியா திரும்பிய பிரதமர் விஞ்ஞானிகள் சந்திக்கிறார்.

பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக பிரதமர் மோடி, விஞ்ஞானிகளின்  அர்ப்பணிப்பான பணியால் விண்வெளி துறையில் நமது தேசம் சாதனை படைத்துள்ளது. தேசத்தை பெருமை அடைய வைத்த விஞ்ஞானிகளை சந்தித்து உரையாட போவதாக பிரதமர் மோடி ட்விட் செய்திருந்தார்.

unknown node