#BREAKING : ஆன்லைன் சூதாட்டம் – சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது : மத்திய அரசு

சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அமைச்சர் விளக்கம்.

சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அமைச்சர் விளக்கம்.

மக்களவையில் எம்.பி பார்த்திபன் அவர்கள் ஆன்லைன் சூதாட்டம் குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது

அவர் கூறுகையில், சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வர தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. பந்தயம், சூதாட்டம் இரண்டும் அரசமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் வருகிறது என விளக்கமளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து முதலில் அவசர சட்டம் இயற்றியது. அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட்டார்.

அதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு மாத கணக்காகியும் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கிடையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் மீண்டும் கூடுதல் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பி இருந்தார்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வரும் நிலையில், மத்திய அமைச்சரின் இந்த விளக்கம் முக்கியமானதாக கருதப்படுகிறது.