#BREAKING : ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் – தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்கில், தமிழக ராசு பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு.

tamilnadu govt

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்கில், தமிழக ராசு பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழக அரசு இயற்றியுள்ள ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து ஆன்லைன் நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் வரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

unknown node

[Image source : the bridge]

அப்போது மனுதாரர் தரப்பில், இந்த வழக்கில் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். கிளப்புகளில் சென்று நேரடியாக ரம்மி விளையாடுவதை விட, ஆன்லைன் ரம்மி பாதுகாப்பானது தான். லாட்டரி, மது, குதிரை பந்தயத்தை தடை செய்யவில்லை. ரம்மி மட்டும் சமூக கேடாக பார்க்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசுக்கு இணைய வழி சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தகுதி இல்லை

இதுகுறித்து தமிழக அரசு தரப்பு வாதத்தில், கணவர்கள் பணத்தை வீணடிப்பதாக அவர்களின் மனைவிகள் கண்ணீர் வடிக்கிறார்களே, நிறுவனங்கள் பணம் சம்பாதித்து குடும்பங்களை சீரழிப்பதால் அந்த குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். மத்திய அரசுக்கு இணைய வழி சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற தகுதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை பாதுகாப்பதற்காக தான் அரசு சட்டம் இயற்றியுள்ளது

unknown node

[Image source : Twitter]

இந்த நிலையில், இந்த விவாதங்களில் உயர்நீதிமன்ற நீதிபதி கூறுகையில், ‘ தன் மக்களை பாதுகாப்பதற்காக தான் அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் லாட்டரி, குதிரைப் பந்தயம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பதிலளிக்க ஆணை

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்கில், தமிழக அரசின் பதில் மனுவை பெறாமல் வழக்கில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறி, இந்த வழக்கில் தமிழக அரசு 6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 3-ஆம் தேதிக்கு உத்தரவிட்டுள்ளது.