#Breaking:புதுச்சேரி துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ராஜவேலு போட்டியின்றி தேர்வு

#Breaking: NRKs MLA P.Rajavalu for Sub-Speaker's post

புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ராஜவேலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட்  கூட்டத் தொடர் வரும் 26-ம் தேதி கூடுகிறது.அப்போது கவர்னர் உரை இடம்பெறும். தொடர்ந்து பிற்பகலில் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று சபாநாயகர் செல்வம் முன்னதாக அறிவித்தார்.

இதனையடுத்து,புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் முடிவடையும் நிலையில், துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ ராஜவேலு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.சபாநாயகர் பதவி பாஜகவுக்கு தரப்பட்டுள்ளதால்,துணை சபாநாயகர் பதவிக்கு என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட்டது.

இந்நிலையில்,துணை சபாநாயகர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில்,என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ராஜவேலு நெட்டப்பாக்கம் (எஸ்சி) தொகுதியில் இருந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.நாளை துணை சபாநாயகராக பதவியேற்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

unknown node